அல்லாஹ்வே உன்னருளை அனுதினமும் வேண்டுகிறோம்.
சொல்லாலும் செயலாலும் நினைத்துயிராய் துதிக்கின்றோம்.
(அல்லாஹ்வே)
உள்ளத்தில் உனை நிறுத்தி உளமகிழ்ந்தே புகழ்கின்றோம்.
தெள்ளறிய நல்வினைகள் நாம் அடைய வேண்டுகிறோம்.
(அல்லாஹ்வே)
மெய்ப்பொருளை உணர்ந்து நாம் மேதினியில் விளங்கச் செய்வாய்.
தூயவனே உன்னிடத்தில் நாம் தினமும் வேண்டுகிறோம்.
(அல்லாஹ்வே)
பெற்றவர்கள் நலம் காக்கும் பிள்ளைகளாக்கிடுவாய்.
கற்றுத்தரும் குரவோர்க்கு கனிந்த நலம் சொரிந்திடுவாய்
(அல்லாஹ்வே )
கட்டிக்காத்துப் பேணி வரும் கலைக்கூடம் ஸாஹிறாவை.
அக்கரையூரொளி விளக்காய் ஆக்கிடச் செய் ரஹ்மானே.
(அல்லாஹ்வே )







